Monday, September 9, 2013

இன்னும் சில நிமிடத்தில் இறக்கப்போகிறேன் ...?

இன்னும் சில நிமிடத்தில் இறக்கப்போகிறேன் ...? 

அன்று விடுமுறை நாள் .. 

நானும் என் காதலியும் கடற்கரை பிரதேசம் ஒன்றுக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றில் மிக வேகமாக போய்க்கொண்டிருந்தோம் ,,தலைக்கவசம் என் காதலி கைப்பைபோல் தோளில் போட்டுக்கொண்டு வந்தாள் நானும் மோட்டார் சைக்கிள் கைபிடியில் மாட்டியபடி சென்றுகொண்டிருந்தேன் .. 

போகின்ற இடத்திலும் மோகத்திலும் பயணம் இருந்ததே தவிர போக்குவரத்து விதிகளில் ஒரு துளிகூட இருக்கவில்லை ....விளைவு ..சற்று நேரத்தில் நடந்து முடிந்தது ... 

என் உயிர் காதலி உருக்குலைந்து இனி பேசாது போய்விட்டாள்..இன்னும் சிலநிமிடத்தில் நான் இறக்கப்போகிறேன் .. 

அதற்குள் சிலவரிகள் எங்களுக்காக யாரும் கண்ணீர் விட வேண்டாம் ..எங்களைப்போல் இனியாரும் இறக்காமல் இருந்தால் இருந்தால் அதுவே நீங்கள் செயும்மிகப்பெரிய அஞ்சலி .. 

இக்கதையை வாசிக்கும் காதலர்களே தயவு செய்து கருத்துக்கூருவதோடு நிற்காமல் உங்கள் நண்பர்களுக்கும் கருத்துக்கூறுங்கள் போக்குவரத்து விதியை மதிக்காமல் இனியும் ஒரு உயிர் இறந்துவிடக்கூடாது ...... 

மதிப்போம் போக்குவரத்து வீதியை ....
(ஒரு பக்ககதை )
14.01.2013 அன்று எழுத்து தளத்தில் பிரசுரித்தது 

தாய் சொல்லை தட்டியவன் நோயாளியாவான்

ஜானகி தன் மகன் ஜனகனை தாயாகவும் தந்தையாகவும் வளர்த்துவந்தாள். ஆமாம் இளம் விதவை அவள் . அவளுக்கு இருக்கும் ஒரே ஒரு ஆறுதல் ஜனகன் தான் . 

அவனுக்காகவே மறு திருமணம் கூட செய்யாமல் கண்ணும் கருத்துமாய் வளர்த்து வருந்தால் பாடசாலைக்கு கூட்டி செல்வது முதல் சகல இடத்துக்கும் கோழி தன் குஞ்சை செட்டையில் வைத்து காப்பதுபோல் காத்து வந்தாள்.

காலம் வேகமாக ஓடியது ஜனகன் 18 வயது இளைஞனானான் இப்போ தாயில் சிறகுக்குள் இருந்து விலகதுடித்தான் .விலகினான் .நண்பர்களோடு அரட்டையும் ரவுடிததானமும் செய்தான்.புகைத்தான்மதுஅருந்தினான்..கிளப்புகளுக்கு போனான் பேதைக்கும் போதைக்கும் அடிமையானான் .

தான் அனுபவிப்பதே உலக இன்பம் என்று கண்மூடித்தனமாக நம்பினான் .தாயின் கனவையும் கருகவிட்டான் . தாயின் மரணவீட்டில் கூட போதையில் தான் தீமூட்டினான் .22வயதில் நோயாளியும் ஆகிவிட்டான் .

தாயின் படத்துக்கு முன்னாள் வந்து மண்டியிட்டு அழுதான் . தாயே என்னை விரைவாக கூப்பிடு 
கண்டதெல்லாம் கோலம் என்று வாழ்ந்து .இப்போ சிறுவயதில் நோயாளியாகி விட்டேன் ...!!!

இறக்கும் நிலையில் இருக்கும் நான் ஒன்றை சொல்கிறேன் ..."தந்தை சொல் கேட்காதவன் "
பொருளாதார கஸ்டத்தை அனுபவிப்பான் ."தாயின்சொல் கேட்காதவன் " நோயாளியாவான் .

(எனது ஒரு பக்க கதை )

நான் ஊசி தான்

உன் கூட்டில் வாழ
வந்தவனை
சிறைபிடிக்கிறாய்...?

நீ
தெருவில் நடந்தால்
நான் நெருப்பில் ..
நடக்கிறேன் ....!!!

நான் ஊசி தான்
மற்றவர்களை
குற்றுவேன் உனக்கு
மாலை கோர்ப்பேன் ...!!!

கஸல் 455

காதலில் பார்க்கலாம் வா ...!!

என்
இதயம் மணல் மண்
அதில் வீடு கட்டியவள் நீ

என்னை என்னில்
பார்க்க முடியவில்லை
உன்னிலும்
பார்க்கமுடியவில்லை
காதலில் பார்க்கலாம் வா ...!!

காதல்
நெருப்பும் சூடும் போல்
நீ குளிர்கிறாய் ...!!!

கஸல் 454

என் காதலை பறித்தவள் ...!!!

நீ காகிதம்
கடிதமாகவும்
இருப்பாய் ...
குப்பையாகவும்
இருப்பாய் .....!!!

நீ
உன் வாழ்வுக்காக
என் காதலை பறித்தவள் ...!!!

உனக்கு
காதல் வரவைக்க
நான்
கவிதை எழுதுகிறேன்
நீ ...கல்லறையை
விரும்புகிறாய் .....!!!

கஸல் 453

காதல் மூடப்பட்டு விட்டது ...!!!

உன் கண் அழகில்லை 
நீ என்னை காதலித்ததால் 
உன் கண் அழகு ....!!!

நகத்தில் பூசிய 
வர்ணம்போல் 
நாம் 
காதல் மூடப்பட்டு 
விட்டது ...!!!

 காதல் கடிதம் போட்டேன் 
அனைத்தும் எனக்கு 
வந்து சேர்ந்தது ....!!!

கஸல் 452

கனவில் தப்பினேன்

உன்னை
பார்த்த அன்று
இழந்தேன்
என் முகத்தை ......!!!

கனவில் தப்பினேன்
உன் நினைவில் தப்ப
மறந்துவிட்டேன் ...!!!

நான் காதலில்
ஊர் குருவி -நீயோ
ஊமை குருவி ....!!!

கஸல் 451

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...