Wednesday, July 31, 2013

கே இனியவன் நகைசுவை கவிதை


என்னவள் சிரித்தாள் .. 
சீனி" டப்பா " உருண்டுவருவது 
போல் இருக்கும் ...!!! 

என்னவள் கதைத்தால் .. 
தகர "டப்பா " உருண்டுவருவது 
போல் இருக்கும்...!!!

என்னவளே நீ ஓடி வந்தால் .. 
தண்ணீர் "பீப்பா " உருண்டுவருவது
போல் இருக்கும்...!!!

சிலநேரம் 
செல்லமாய் அடிப்பாய் .. 
இரும்பு குண்டு இடித்ததுபோல் இருக்கும்..

என்னதான் என்னவள் "'டப்பாவோ"' பீபபாவோ"" 
என்" இதய டப்பாவுக்குள் " குடிகொண்டிருக்கும் ..
அன்பு டப்பா .....!!!

கொடூரம் கொடூரம் -ஒரு தலை காதல் ...!!!

சொல்லவா விடவா ...?
சொன்னால் ஏற்பாயா...?
நிராகரிப்பாயா ...?
மண்புழு மேல் மண்ணெண்ணையை ..
ஊற்றியதுபோல் துடிக்கிறேன்
புரிந்துகொள் ..இல்லை
ஊரைவிட்டு பிரிந்து செல் ...!!!

சீ... சீ... நீ ஊரை விட்டு
பிரிந்து சென்றாலும் -உன்
நினைவில் விட்டு பிரியவா போகிறேன் ...?
தயவு செய்து ஊரைவிட்டு சென்றுவிடாதே ...!!!

என் முன் யாருடனும் கதைக்காதே ..
என் இதயம் தாங்க தயார் இல்லை ...!!!
இல்லை இல்லை நான் சந்தேகப்படவில்லை ..
நீ நன்றாக பேசு ...!!!

அப்போது என்றாலும் உன் சிரிப்பை ..
காணும் பாக்கியம் கிடைக்கட்டும் ..!!!
காதலித்து தொலைக்கலாம் ..
நீ மறுத்தால் என்ற பயம் ...
காதலை சொல்ல மறுக்கிறது ...!!!
கொடூரம் கொடூரம் -ஒரு தலை காதல் ...!!! 

கே இனியவன் (சென்றியு ) ஹைக்கூக்கள்

எல்லாமே சேர்ந்தது
எல்லாமே சென்றது
தர்மம் இல்லாத சொத்து

**************

இறங்கும் பாதையை தடை செய்யாதீர்
கூக்குரல் இட்ட பயணி
பஸ்ஸின் கூரையில்

**************

சாகசங்கள் செய்து காட்டுவோம்
சன கூட்ட நெரிசலுக்குள்
மோட்டார் சைக்கிள் வீரர்கள்

**************

நன்றி மறந்தவன்
தமிழன்
தாங்க்ஸ் சொல்லுகிறான்

(நடிகர் கமலஹாசன் பேசியதை
அவதானித்தேன் அதிலிருந்து உருவாக்கினேன் )

**************

குழந்தை பருவம்
முதுமை பருவம்
சிரிக்கும் போது பல் ..?

பறவைகள் கற்று தந்த படிப்பினைகள் ஹைக்கூ வடிவில்

பறவைகள் கற்று தந்த படிப்பினைகள்
சில ஹைக்கூ வடிவில்

பிறர் பிள்ளையை
தன் பிள்ளையாக வளர்
குயில்

*******************

அழகாக இருந்தால்
ஆபத்தை சந்திப்பாய்
கிளி

*******************

கூட்டு குடும்பத்தை
கற்று தந்தது
காகம்

******************

நல்ல வாய்ப்பு வரும் வரை
பொறுமை வேண்டும்
கொக்கு

******************

உயரே சென்றால் நிலையை
நிலையாக வைத்துக்கொள்
பருந்து 

மனம்

நாள் தோறும் சுத்தீகரிப்பு 
குப்பை குறையவில்லை 
மனம்

பழைய பூ வைக்கிறாய் ....!!!

காதல் கடிதம் 
போட்டேன் 
எனக்கே வந்தது ...!!!

கருங்கல்லில் 
ஆணி அடிப்பது போல் 
நம்காதல் 

காதல் தெய்வத்துக்கு 
புது பூ வைக்கிறேன் 
நீ 
பழைய பூ வைக்கிறாய் ....!!!

கஸல் 283

உன் காதலைப்போல் ...!!!

காதல் 
தேன் கூடு 
குழவிக்கூடு 
உனக்கு எது ....?

பாலும் வெள்ளை 
கள்ளும் வெள்ளை 
உன் காதலைப்போல் ...!!!

வலையை போட்டேன் 
காதல் மீனுக்கு பதில் 
காதல் கல் வருகிறது 

கஸல் 282

நீ தாமரைமேல் தண்ணீர்

இதயத்தில் 
இருக்கவேண்டிய நீ 
குரல் வளையில் 
இருக்கிறாய் ....!!!

காதல் எனக்கு 
உள்ளம் 
உனக்கு 
உடல் ....!!!

நான் தண்ணீர் 
மேல் தாமரை 
நீ தாமரைமேல் 
தண்ணீர் 

கஸல் ;281

பிழைக்குமா ....?

திடீரென ஏற்றபட்டது ..
நெஞ்சுவலி
பதட்டப்பட்டார் அம்மா
எக்ஸ்ரே எடுக்க சொன்னார் டாக்டர் ...
கேலியாக கேட்டான் நண்பன் ...
என்ன மச்சி இன்னைக்கு ...
வாட்டிட்டாள் போல அவள் ...!!!
நண்பன் அல்லவா அவன் சொல்லது ..
பிழைக்குமா ....?

பனிப்போர் ...!!!

இரண்டு நாட்டுக்கு இடையில் ...
பனிப்போர் ....!!!
குடும்பத்தில் இருவருக்கும் ..
இடையில் பனிப்போர் ...!!!
என்றெல்லாம் சொல்லும் போது...
புரியாத அர்த்தம்...?

நீ ...
ஐஸ் கிறீம் சாப்பிடும் போது ...
உதடும் ஐஸ் கிறீமும்..
மோதியபோதுதான் ....
ஐயம்  கொண்டேன் ...?
இதுவோ பனிப்போர் என்று ...?

நீ சிரித்த போது ..
என் இதயம் சில் என்றதே ...
அதுவோ பனிப்போர் ...?

மாலை எனக்கு குறுஞ்செய்தி ...
அனுப்பினாயே -நான் ...
கோயிலுக்கு போகிறேன்....
அந்த செய்தி பார்த்தவுடன் ...
என் உடல் குளிர்ந்ததே ...
அதுவோ பனிப்போர் ...?

பனிப்போருக்கு முடிவுவரும் ...!!!
நீ என்னை மணமுடிக்கும் போது ...!!!

மண வாழ்வா ...? மனச்சாவா ....?காதல் புரிந்து கொண்டால்...
மணவாழ்வு ....!!!
பிரிந்து சென்றால் ...
மனச்சாவோ ...???

உன்னை பார்த்த அந்த நொடி ..
என் இமைகளுக்கு பூட்டு ...
போட்டு பூட்டிவிட்டேன் ....
உன்னை மட்டும் பார்ப்பதற்காக ...!!!

உன் எண்ணங்கள் என்ன ....?
மின்னலா ...? இப்படி என்னை ...
எரிக்கிறதே ...???
தயவு செய்து குளிர்மைப்படுத்து ...!!!

உன் கண்ணாலும் என் கண்ணாலும் ..
விதைக்கப்பட்ட விதை தான் நம்
காதல் ....!!!

இன்னும் எந்த அகராதியை...
தேடுகிறாய் ..??
என்னை விரும்புகிறேன் ...
என்று சொல்லும் ...
ஒரு வார்த்தைக்காக ....???

நீ சொல்லும் அந்த வார்த்தைதான் ...
மணவாழ்வு ....!!!
மனச்சாவு ...!!!

கண் காதலுக்கு

கண் காதலுக்கு
உனக்கு
கண்ணீருக்கு ...!!!

உன்
நினைவுகள்
அழுகை
கனவுகள்
இன்பம்

காதலில் பால்
நான் ...!!!
நீ
புளிக்கும் தயிர் ...!!!


கஸல் 280

ஊதியணைக்கிறாய்

காதலில்
உயர பறக்கிறேன்
நீ
இறக்கையை
உடைக்கிறாய்

காதலில்
பாம்பின் வாயில்
உள்ள தவளை நான்

காதல் தீபம்
காட்டுகிறேன் -நீ
ஊதியணைக்கிறாய்

கஸல்  279

நீ சின்ன தீப்பொறி

என் 
காதல் இருட்டறை 
நீ 
சின்ன தீப்பொறி 

என் 
காதல் கீதம் இன்பம் 
நீ சோக கீதம் 

மூழ்கும் படகில் 
உயிர் போகிறது 
நீ முத்தெடுக்க
சொல்கிறாய் 

கஸல் 278

ஊர்வன கற்றுதந்தவை சில ஹைகூவாக

ஊர்வன கற்றுதந்தவை சில ஹைகூவாக 

சுறு சுறு பாக்க இரு 
எதிர்காலத்துக்கு சேமி 
  எறும்பு 

***************************
ஐம் புலன்களையும் அடக்கு 
ஞானியாவாய் 
   ஆமை 

****************************
முன்னேற்றத்துக்காக 
கொள்கையை மாற்று 
  பச்சோந்தி 

******************************

பொறுமையாக செயல்படு 
இலக்கை அடை
    நத்தை 

******************************

செய்வது கொடுமை 
ஊரில் நற்பெயர் 
  நல்ல பாம்பு (நாக பாம்பு )

மனிதனுக்கு கற்றுதந்த விலங்குகள் (ஹைகூ )

 மனிதனுக்கு கற்றுதந்த விலங்குகள் (ஹைகூ )
மனிதனுக்கு கற்றுதந்த விலங்குகள் 
ஹைக்கூ வடிவில் சில
***********************************

உடம்பையே வளர்க்காதே 
நம்பிக்கையையும் வளர் 
யானை 

காப்பவனை காப்பாற்று 
கற்றுதந்தது 
நாய் 

குறிக்கோளுடன் வாழ்
தன்னிலை இழக்காதே 
புலி 

வாழ்க்கை ஒரு சுமை 
அழாமல் சுமந்துகொள் 
கழுதை 

உழைக்காமல் சாப்பாடு 
மெத்தையில் தூக்கம் 
பூனை 

இனப்பெருக்கம் 
கற்றுத்தந்தது 
பன்றி 

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...