Thursday, July 25, 2013

உனக்கு தெரியுமா ..?

கடல் அலை தன் காதலியை ..
கரையில் வந்து தேடுவது போல் ..
நான் என் இதயத்தில் ...
உன்னை தேடுகிறேன் ...

நீ வரும் போது ..
பெரும் கடல் அலை ...
வருவதாகவே ....
நினைக்கிறேன் ...

உனக்கு தெரியுமா ..?
நீ கண் எறிந்த நாள் தான் ..
என் கலண்டர் நாள் ..
வருடப்பிறப்பு ...!!!

கஸல் 212

எது அழகு…?

கடலுக்கு எது அழகு…?
அலை அழகு ,...!!!
அலைக்கு எது அழகு…?
கரை அழகு ...!!!
கரைக்கு எது அழகு…..?
மண் அழகு ...!!!
மண்ணுக்கு எது அழகு...?
வாசம் அழகு ...!!!
வாசத்திற்கு எது அழகு…?
பூ அழகு .....!!!
பூவுக்கு எது அழகு…...?
பெண் அழகு ...!!!
பெண்மைக்கு எது அழகு…?
தாய்மை அழகு ...!!!
தாய்மைக்கு எது அழகு…?
பாசம் அழகு ...!!!
பாசத்திற்கு எது அழகு...?
உயிர் அழகு ....!!!
உயிருக்கு எது அழகு..?
உடல் அழகு ...!!!
உடலுக்கு எது அழகு...?
வயது அழகு ...!!!
வயதிற்கு எது அழகு..?
காதல் அழகு ...!!!.
காதலுக்கு எது அழகு…?
கற்பு அழகு ......!!!
கற்புக்கு எது அழகு…...?
வாழ்க்கை அழகு…!!!
வாழ்க்கைக்கு எது அழகு…?
மரணம் அழகு….!!!
மரணத்திற்கு எது அழகு…?
வாழ்க்கை பாடம் அழகு ....!!!

மறக்க மாட்டேன்

கண் இல்லாமல் 
காதல் வரலாம், 

கற்பனை இல்லாமல் 

கவிதை வரலாம், 

ஆனால் உண்மையானஅன்பு 
இல்லாமல் நட்பு வராது, 

இதயத்தில் இடம் கொடுப்பது 

காதல் இதயத்தையேஇடமாக 
கொடுப்பது நட்பு, 

நான் நேசிக்கும் பலர் 

என்னை நேசிக்க மறந்தாலும்

,என்னை 
நேசிக்கும் உன்னை உயி௫ள்ள 

வரை மறக்க மாட்டேன்


கிரிக்கட் காதல்

கிரிக்கட் காதல் 
 

நானும் நீயும் .. 
அப்பபோது முரண் பட்டாலும் 
எமக்குள் உறவுதான் இருந்தது 
மூன்றாம் நபர் குறுக்கிட்டதால் 
அவுட்டாகி விட்டோம் 
கிரிக்கட்டை போல


எத்தனை முறைதான் ..

எத்தனை முறைதான் ..
உன்னிடம் இருந்து தப்புவது ...?
சிரித்தாய் - சிறைப்பட்டேன் 
கண்ணடித்தாய் - களவாட பட்டேன் 
கை அசைத்தாய் - கைதியானேன் 
எத்தனை முறைதான் -காதல் 
குற்றவாளியாவது ...?

கே இனியவன் ஹைபுன் 02

ஏண்டீ மீனாஷ்சி காலையில என்ன இருக்கு ..வேலைக்கு போகணும் எதண்டாலும்..
தாவன் திண்டுட்டு போட்டுவாரன் ..ஆமா மகராசா சாமான்களையெல்லாம் வாங்கி தருவாறு 
காலையில்லை சாப்பிட சீ போ..கசுமாரம்..போய் நாலு துட்டு கொண்டுவா உனக்கு ஆக்கிப் போடுறன் ...இத்தனையும் வாங்கி காட்டினார் சுப்பு ...

அன்றாடம் சாப்பாடே அவனுக்கு லடாய் தான் பணம் துட்டு இதுதான் ..
காலம் ஓடியாது ..கும்பிட போன தெய்வம் குறுக்க வந்ததுபோல் ஒருநாள் அதிஷ்ட லாப 
சீட்டில் பல இலசம் ரூபா விழுந்தது ...திடீர் பணக்காரன் ஆனார் சுப்பு ..
சந்தித்தார் பிரச்சனையை மூத்த மகள்...வீட்டோடு வந்துவிட்டாள் புருசன விட்டு 
இரண்டாவது மகள் மூத்த மகளுடன் ஒரே நாய் கடி பூனா கடி சண்ட ..
அப்பாவின் சொத்துக்கு வந்திட்டியா ..? என்று சண்ட..மற்ற பக்கத்தில் மீனாஷ்சி ..
வயதுக்கு மீறிய டாம்பீகம் ...எடுவை கதை ...

எல்லாதுன்பத்தையும் தாங்க முடியாத சுப்பு சந்நியாசம் போய்விடார் 

haikoo 
இல்லாவிட்டாலும் பிரச்சனை 
இருந்தாலும் பிரச்சனை 
பணம்

கே இனியவன் ஹைபுன்..01

காத்திருப்பேன் அவள் வருவாள் ..
பக்கத்தில் அவள் அண்ணன் ...
சைக்கிளில் வருவார் ..
அருகிலே செல்வேன் ..
கண்ணால் கதைப்பேன் ..
அவள் யாடையால் கதைப்பாள் ..
அண்ணன் கிட்டவரும் போது..
என் நடை வேகமாகும் ...
பாடசாலைதான் எனக்கு காதல் சாலை ..
கொப்பியை பரிமாறும் போது ..
கடிதமும் பரிமாறும் ...
விழுந்தது கடிதம் நிலத்தில் ..
கண்டார் ஆசிரியர் தந்தார் ..
முதுகில் நல்ல பூசை ..
நண்பர்கள் கிண்டல் 
நண்பிகள் அவளை கிண்டல் ..
காலம் காதலாகியது ..
கல்வி கரைக்கு வந்தது ..
காதலும் கரைக்கு வந்தது ...

haikoo
பள்ளி காதல் தொடரும் 
பள்ளிவரை இல்லை 
+பள்ளி படலைவரை +

இன்றைய காதல் தத்துவங்கள்

போதையால் அழிந்த இளைஞர்களை  விட 

பேதையால் அழிந்த இளஞர்களே அதிகம் ...!!!

காதல் சிரிக்க வைத்ததை விட 

அழவைத்ததே அதிகம்

காதலில் ஆரம்பத்தில் சிரித்ததை 
போல் இறுதிவரை சிரித்தவர் இல்லை 

அப்படி சிரித்தால்
துன்பத்திலும் சிரிக்க கற்றுவிட்டவர்கள் ...!!!
*********************

காதலில் பூவை கொடுத்து 
இதயத்தை வாட வைப்பவர்கள் தான் 
அதிகம்

***********************

அதையும் வந்து எடுத்துவிடு ...!!!

அவள் தந்த கடிகாரம் ...
கைபேசி ...
வாழ்த்து அட்டைகள் ..
புகைப்படங்கள் ...
சின்ன சின்ன பரிசுகள் ..
எல்லாவற்றையும் ...
வாங்கிசென்று விட்டாள் ...!!!
தந்த நினைவுகளையும் ...
வலிகளையும் என்னிடம் ..
விட்டு விட்டு சென்றுவிட்டாள் ...!!!
அதையும் வந்து எடுத்துவிடு ...!!!
நான் முன்னரைப்போல் ..
வாழவேண்டும் ....!!!

எனக்கு முழுமையாக வேண்டும் ...!!!

கை - பிடித்தபடி கடற்கரையில் ..
பே-சித்திரிந்த நம் காதல் ...
சி-ன்னாபின்னமானது  எப்படி ...?

தொ-லைந்துபோன என் இதயத்தை ..
லை-லா - நீ கண்டெடுத்தால் தா ...
பே-தைபோல் கெஞ்சுகிறேன் ..
சி- ந்தையுடன் செயல்பாடு ...

உன் கைபேசியோ,தொலைபேசியோ ..

அடிக்கு மணி ஓசை ..
என் கண்டெடுத்த இதயத்தை ...
தந்த செய்தியாக இருக்கட்டும் ..
கவனித்துகொள் என் இதயம் ..
எனக்கு முழுமையாக வேண்டும் ...!!!

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...