இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...?

காற்சட்டை போட்ட வயதில் ....

கைகோற்றுக்கொண்டு ஒட்டிபிறந்த
உடன் பிறப்புப்போல் ஊர் முழுவதும்
சுற்றி திரிவோம் வெய்யில் மழை
பாராமல் - உன் பெயரை எனக்கும்
என் பெயரை உனக்கும் மாற்றி கூப்பிடும்
தாத்தாவின் தர்மசங்கடத்தை இன்று
நினைத்தாலும் சிரிப்புவரும் ..
சொல்லி சிரிக்க வேண்டும்போல் இருக்கடா
எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...?

லுங்கி கட்டியவயத்தில் .....

எனக்கு வருத்தமென்றால் -உன்
உடல் சோரும் -உனக்கு வருத்தம்
என்றால் எனக்கு உடல் சோரும்
ஊரிலுள்ள மூலிகை எல்லாம்
கொண்டுவந்து தந்து குடியடா ..
குடியடா என்று நச்சரித்து நச்சரித்து
மூலிகையால் வருத்தம் மாறுதோ
தெரியாது உன் அன்பு மூலிகையால்
மாறிவிடும் வருத்தம் -இதையெலாம்
சொல்லி சிரிக்கணும் போல இருக்கடா
எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...?

ஜீன்ஸ் போட்ட வயதில் .....

எனக்கு தான் காதல் வலி
எனக்கு தான் வாழ்க்கை வலி
உனக்கு நான் சொல்லி அழும்போது
உன் ஓரக்கண்ணால் வடியுமடா ஒரு
துளி கண்ணீர் - நான் குடம் குடமாய்
வடித்த கண்ணீருக்கு ஈடாகுமடா
உன் ஒரு துளி கண்ணீர் -இப்போ
நினைத்தாலும் அழகை வருமடா
நீ அழுத்த அந்த அழுகை -வாடா
நண்பா மீண்டும் ஒருமுறை அழுவோம்
எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...?

வேட்டி கட்டிய வயதில் ....

வாழ்க்கையில் வேதனை சோதனை
பிள்ளைகளால் பிரச்சனை
ஊரார் உறவினரால் பிரச்சனை
இருந்த சொத்தெல்லாம் ஊரூராய்
அகதியாக திரிந்து இழந்து விட்டேன்
இருக்கும் போது வந்த சொந்தங்கள்
இப்போ வருவதில்லை - உண்டு கழித்த
உறவுகளும் திரும்பி பார்ப்பதில்லை
நீ மட்டும் இருந்திருந்தால் இந்த நிலை
எனக்கு இல்லை - எனக்கு முன்
எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...?