இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 27 ஜூலை, 2013

அடித்தாலும் அணைப்பது அன்னையை போல் நட்பு தான் ...!!!

நண்பா ...
வேண்டுமென்றே மழையில்
நனைந்தோம் உனக்கும் வீட்டில்
அடி -எனக்கும் வீட்டில் அடி ...!!!

பள்ளி நேரத்தில் அருகில்
உள்ளவனை கிள்ளியது நான்
ஆசிரியர்  உனக்கும் அடி
எனக்கும் அடி ....!!!

கட்டிளம் பருவத்தில் -உன்
காதலுக்கு உதவி செய்தேன்
அவள் அண்ணன் உனக்கும் அடி
எனக்கும் அடி ...!!!

வேலையில் இருந்தோம்
கும்மாளம் செய்தோம்
வேலை நிறுவனம் -வயிற்றில்
உனக்கும் அடி எனக்கும் அடி ...!!!

எத்தனை அடியை
உனக்காக நானும்
எனக்காக நீயும்
 வாங்கியிருக்கிறோம் ...
அப்போதும் வலிக்கவில்லை
இப்போது வலிக்கவில்லை ....!!!

நட்பு மட்டும்தான் அடித்தாலும்
அணைக்கும் அன்னையை போல் ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக